/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்திணை பாலை நில பூங்காவில் பராமரிக்கப்படும் பழக்கன்றுகள்
/
ஐந்திணை பாலை நில பூங்காவில் பராமரிக்கப்படும் பழக்கன்றுகள்
ஐந்திணை பாலை நில பூங்காவில் பராமரிக்கப்படும் பழக்கன்றுகள்
ஐந்திணை பாலை நில பூங்காவில் பராமரிக்கப்படும் பழக்கன்றுகள்
ADDED : நவ 29, 2024 05:38 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஐந்திணை பாலை நில பூங்காவில் பழக்கன்று மற்றும் பூச்செடிகளுக்கான நர்சரி உள்ளது.
ஒட்டுரக நெல்லிக்காய் மரங்களுக்காக நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை பாதியாக நறுக்கி அவற்றுடன் ஏற்கனவே உள்ள நெல்லி மரக் குச்சியை கீரி வைத்து அவற்றை இணைத்து பராமரிக்கின்றனர். பராமரிப்பாளர்கள் கூறியதாவது: ஐந்திணை பாலை நில பூங்காவில் ஏராளமான மலர் செடிகள், பழக்கன்றுகள், குரோட்டன்ஸ் செடி வகைகள் விற்பனைக்கு பராமரிக்கப்படுகிறது. ஒட்டுரக நெல்லிக்காய் மரம் 3 ஆண்டுகளுக்குள் பலன் தருகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் நர்சரியில் அதிக எண்ணிக்கையில் பழச்செடிகள் வளர்க்கப்படுகிறது. தேவைப்படுவோர் குறைந்த விலையில் இங்கு வாங்கலாம் என்றனர்.