/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டை உடைத்து ஐந்து மாதமாகியும் பணி துவங்கல
/
ரோட்டை உடைத்து ஐந்து மாதமாகியும் பணி துவங்கல
ADDED : நவ 20, 2024 04:59 AM

ராமநாதபுரம் : திருப்பாலைக்குடி ஊராட்சி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் புதிய ரோடு அமைக்க, பழைய ரோட்டை உடைத்து பணி துவங்கி அப்படியே 5 மாதங்களாக கிடப்பில் விட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி ஊராட்சி கண்மாய்கரை குடியிருப்பில் 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. பஸ்ஸ்டாப் செல்லும் ரோட்டை உடைத்து புதிதாக ரோடு அமைக்கும் பணி துவங்கி அப்படியே விட்டுவிட்டனர்.
இதனால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. வயதானவர்கள், மாணவர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே உடைத்த ரோட்டை வேலை பார்த்து தரமான புதிய ரோடு அமைத்து தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

