/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவனை கடத்திய கும்பல் சிவகங்கையில் பதுங்கல் 3 தனிப்படை அமைத்து தேடுதல்
/
மாணவனை கடத்திய கும்பல் சிவகங்கையில் பதுங்கல் 3 தனிப்படை அமைத்து தேடுதல்
மாணவனை கடத்திய கும்பல் சிவகங்கையில் பதுங்கல் 3 தனிப்படை அமைத்து தேடுதல்
மாணவனை கடத்திய கும்பல் சிவகங்கையில் பதுங்கல் 3 தனிப்படை அமைத்து தேடுதல்
ADDED : அக் 17, 2024 02:55 AM
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பள்ளி மாணவனை காரில் கடத்திய கும்பல் சிவகங்கையில் பதுங்கி இருக்கும் தகவலையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுகின்றனர்.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கிய அமலதாஸ் மகன் ரெக்சன் 12. தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
வழக்கமாக சைக்கிளில் செல்லும் ரெக்சன் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு நடந்து சென்றார்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அருகே சென்ற போது சிவப்பு நிற கார் அவர் அருகே சென்று நின்றது.
மாணவர் வாயில் துணியால் அழுத்தி காரில் கடத்திச் சென்றனர். கார் டிரைவருடன் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர்.
திருவாடானையில் காரை நிறுத்திய போது கதவை திறந்து மாணவர் தப்பி ஓடினார். திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் போலீசார் சின்னக்கீரமங்கலம், திருவாடானை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஆரோக்கிய அமலதாஸ் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் முப்பையூர் அருகே மேக்காரக்குடி. நேற்று காலை புளியால் வழியாக சிவப்பு நிற காரில் சென்றவர்கள் முப்பையூருக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளனர்.
எனவே முப்பையூரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடத்தல்காரர்கள் சிவகங்கையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அங்கு தேடி வருகின்றனர்.

