/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தற்கொலையை கொலை வழக்காக மாற்ற குடும்பத்தினர் வலியுறுத்தல்
/
தற்கொலையை கொலை வழக்காக மாற்ற குடும்பத்தினர் வலியுறுத்தல்
தற்கொலையை கொலை வழக்காக மாற்ற குடும்பத்தினர் வலியுறுத்தல்
தற்கொலையை கொலை வழக்காக மாற்ற குடும்பத்தினர் வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2024 11:19 PM

ராமநாதபுரம்: கமுதி யாகப்ப ராஜ் மனைவி இன்பஜான்சிராணி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது மகள் திவ்யா மேரி 25, தற்கொலையில் சந்தேகம்உள்ளதால் கொலை வழக்காக மாற்றி ஆர்.டி.ஓ., தலைமையில் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது மகள் திவ்யா மேரிக்கும் சாயல்குடி வி.வி.ஆர். பாரதியார் தெரு அந்தோணிராஜ் மகன் அகஸ்டின் 27,க்கும் திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. 45 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம் சீர்வரிசை கொடுத்தேன். இந்நிலையில் பிப்.13ல் திவ்யாமேரி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனையின் போது ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் எங்களிடம் விசாரிக்கவில்லை. தற்போது மீண்டும் புகார் அளித்தால் வாங்க மறுத்து போலீசார்அலைக்கழிக்கின்றனர்.
எனவே கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.