/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் வரத்து கால்வாய் பிரச்னைக்கு தீர்வுகாண சிறுவயல் மக்கள் கோரிக்கை

ADDED : டிச 17, 2024 03:49 AM

ராமநாதபுரம்: கிளியூர் பிர்கா சிறுவயல் கிராம மக்கள் பொதுப்பணித்துறை கண்மாய் வரத்து கால்வாய் உரிமையை அதிகாரிகள் ஆய்வு செய்து இரு ஊர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
பரமக்குடி தாலுகா சிறுவயல் கிராம விவசாயிகள், பொது மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், சிறுவயல் மேற்கு, கிழக்கு, நடுக்குடியிருப்பு ஆகியவற்றிற்கும் ஒரே பாசன கண்மாய் நீரில் 394 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.
மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வரத்து கால்வாய் மூலம் சிறுவயல் கண்மாய் வருகிறது.
வைகை நீர் பி.கொடிக்குளம், பெரிய கண்மாய்க்கு சென்று அதன் உபரிநீர் வரத்து கால்வாய் மூலம் சிறுவயல் வருகிறது. இதற்கு மாறாக நாங்கள் செயல்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கடம்பூர் வரத்து கால்வாய்க்கும் சிறுவயல் கண்மாய் வரத்து கால்வாய்க்கும் சம்பந்தம் இல்லை. எனவே இரு கிராம வரத்து கால்வாய்கள் செட்டில்மென்ட் ஆவணங்களில் உள்ளது போல சரி செய்து இரு கிராம மக்கள் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் நிரந்தரமாக தடுக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.