/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

ADDED : பிப் 15, 2024 05:01 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனான நேற்று சிறப்பு திருப்பலியுடன் துவங்கியது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்கு முன் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.
இயேசு சிலுவையில் உயிர்நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
இதன்படி 40 நாட்கள் தவக்காலம் ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் வழிபாட்டுடன் துவங்கும். அதன்படி சாம்பல் புதன்கிழமையான நேற்று கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது.
தவக்கால விரதம் துவங்குவதற்கு அடையாளமாக கடந்த ஆண்டு நடைபெற்ற குருத்தோலை பண்டிகையின் போது கொண்டு வந்து சேர்த்த பழைய குருத்தோலைகளை எரித்து அதில் கிடைத்த சாம்பலை நெற்றியில் சிலுவை அடையாளமாக பாதிரியார்கள் பூசினர்.
மாவட்டத்தில் உள்ள சர்ச்சுகளில் நடைபெற்ற தவக்கால சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசி ஆசீர்வாதம் செய்யப்பட்டது. தவக்காலத்தின் நிறைவாக மார்ச் மாதம் 24ல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடைபெறும்.
இதனை தொடர்ந்து மார்ச் 29ல் புனித வெள்ளியும், 31ல் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
ராமநாதபுரம் ஆர்.சி., சர்ச்சில் நடந்த சிறப்பு திருப்பலியில் பாதிரியார் சிங்கராயர் சிறப்பு திருப்பலி நடத்தி சாம்பல் புதன் ஆசி வழங்கினார். உதவி பாதிரியார் ரீகன் மற்றும் பங்கு மக்கள் சிறப்பு திருப்பலி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.-----------