/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏழை, நடுத்தர பெண்களை குறி வைத்து வசூல் வேட்டை! மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி
/
ஏழை, நடுத்தர பெண்களை குறி வைத்து வசூல் வேட்டை! மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி
ஏழை, நடுத்தர பெண்களை குறி வைத்து வசூல் வேட்டை! மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி
ஏழை, நடுத்தர பெண்களை குறி வைத்து வசூல் வேட்டை! மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி
ADDED : மே 19, 2024 11:32 PM

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மகளிர்களை குறித்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் என்ற பெயரில் சிலர் அதிக வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சிக்கல், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட இடங்களில் அடாவடி வசூல் வேட்டையால் குடும்பத்தலைவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கல்லுாரி படிப்பை முடித்த இளைஞர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை கிராமங்கள் தோறும் குறைந்த வட்டி என்று சொல்லி 20 பேர் கொண்ட மகளிர் குழுவிற்கு வழங்குகின்றனர்.
கல்விச் செலவு, மருத்துவச் செலவு மற்றும் அவசர தேவைகளுக்காக பெறப்படும் கடன்களை உரிய முறையில் மகளிர் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் சிறிது காலதாமதம் ஆனால் உடனடியாக வீட்டிற்கு நான்கு இளைஞர்கள் வந்து பணத்தை எப்ப கட்ட போகிறீர்கள் என மிரட்டுவதால் பெண்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சாயல்குடியை சேர்ந்த குடும்ப தலைவிகள் கூறியதாவது: பெண்களுக்கு மட்டுமே மைக்ரோ பைனான்ஸ் கடன் கொடுக்கின்றனர். வாரம் ஒரு முறை குழுவாக சேர்ந்து கொண்டு பணத்தை கட்டுகிறோம். குழுவில் ஒருவர் கட்டவில்லை என்றால் கூட மீதி உள்ளவர்களும் அந்த தொகைக்கான பணத்தை செலுத்தும் வரையில் சிரமத்தை சந்திக்கிறோம். கிராமப்புறங்களை குறிவைத்து நடத்தப்படும் மைக்ரோ பைனான்ஸ் தங்களது அடாவடி வசூலை ஆரம்பித்து பல்வேறு குடும்பங்களில் பிரச்னையை ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் ஏராளமான பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்டத்தில் கை்ரோ பைனாஸ் நிறுவனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும். அதிக வட்டி வசூலிக்கும் மைக்ரோ பைனான் நிறுவனங்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.

