/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.120
/
கிராமங்களில் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.120
கிராமங்களில் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.120
கிராமங்களில் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.120
ADDED : மே 09, 2025 01:25 AM

பெரியபட்டினம்: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் புளிய மரங்களில் காய்ப்பு அதிகரித்துள்ளது. கொட்டை எடுக்கப்பட்ட புளி கிலோ ரூ.100 முதல் 120க்கு விற்கப்படுகிறது.
பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், குத்துக்கல் வலசை, மேதலோடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு புளிய மரங்கள் வீடுகளிலும் சாலையோரங்களிலும் பலன் தந்து கொண்டிருக்கின்றன. கோடை காலத்தில் பலன் தரக்கூடிய புளிய மரங்களை மரத்தின் மீது ஏறி உலுப்பியும் தரையில் துணி விரித்து அவற்றில் புளியம்பழங்களை சேகரிக்கின்றனர்.
புளி வியாபாரிகள் கூறியதாவது: கிராமங்களில் இருந்து புளிய மரங்களை இருந்து புளியம்பழங்களை சேகரித்து அவற்றில் உள்ள கொட்டைகளை நீக்கி கிலோ புளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கிறோம். இப்பகுதியில் விளையக்கூடிய புளியம்பழங்கள் அதிக புளிப்பு தன்மையும் ருசியும் மிகுந்தவை.
கோடை காலத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இது உபரி வருமானமாகவே உள்ளது. இத்தொழிலை ஆர்வமுடன் செய்கின்றனர் என்றனர்.

