/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடைகாலம் எதிரொலி கிர்ணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
/
கோடைகாலம் எதிரொலி கிர்ணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
கோடைகாலம் எதிரொலி கிர்ணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
கோடைகாலம் எதிரொலி கிர்ணி பழங்கள் விற்பனை அதிகரிப்பு
ADDED : மே 08, 2025 02:28 AM

ராமநாதபுரம்: கோடை காலத்தை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு திண்டிவனத்தில் இருந்துகிர்ணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வெயிலின்தாக்கத்தால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
ராமநாதபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மதியம், இரவில்வெப்பசலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாகதர்பூசணி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்கள் ஜூஸ், சர்பத்,ஜிகர்தண்டா, ஐஸ்கீரிம் ஆகிய குளிர் பானங்களின் விற்னைஅதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது சீசனை முன்னிட்டு திண்டிவனத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கிர்ணி பழங்கள் அதிகளவில்வந்துள்ளன. தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு விற்கப்படுகிறது. உடல் உஷ்ணத்தைகுறைக்கும் மருத்துவ குணமிக்க பழம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன்வாங்குகினறனர் எனவியாபாரிகள் கூறினர்.