/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விஷ வண்டுகள் கடித்து மாணவர்கள் பாதிப்பு
/
விஷ வண்டுகள் கடித்து மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 14, 2024 02:59 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி தற்காலிகமாக செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதல் தளத்தில் செயல்படுகிறது. இங்கு மாவட்டம் முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற 300 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
இம்மாணவர்களை சில நாட்களாக விஷ வண்டுகள் கடிப்பதால் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு கொப்புளங்களால் தவிக்கின்றனர். பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரத்தில் அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில்மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

