sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலாளர்களுக்கு ரூ.164 கோடி விடுவிப்பு

/

தொழிலாளர்களுக்கு ரூ.164 கோடி விடுவிப்பு

தொழிலாளர்களுக்கு ரூ.164 கோடி விடுவிப்பு

தொழிலாளர்களுக்கு ரூ.164 கோடி விடுவிப்பு


ADDED : மார் 14, 2024 03:34 AM

Google News

ADDED : மார் 14, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இணை ஆணையர் தகவல்

பரமக்குடி: மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளில் 164 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாக தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பரமக்குடி தனியார் உணவகம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

மதுரை மண்டலத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் மட்டும் சிலர் உள்ளனர்.

குறைந்தபட்ச ஊதியம் சட்டத்தின் படி 2844 பேருக்கு 8 கோடியே 7 லட்சம் ரூபாய், பணியாளர் இழப்பீடு சட்டத்தின் படி 1121 பேருக்கு 37 கோடியே 65 லட்சம் ரூபாய் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

கட்டுமானம், உடல் உழைப்பு மற்றும் ஆட்டோ ஆகிய மூன்று நல வாரியங்களில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 847 பேர் பயனடைந்துள்ளனர்.

இவர்களில் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி மற்றும் இயற்கை மரணம், விபத்து மரணம் குடும்ப ஓய்வூதியம் என 164 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கியமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியமாக 173 பேருக்கு 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மற்றும் ஒட்டுமொத்தமாக மாதாந்திர ஓய்வூதியம் 34 ஆயிரத்து 796 பேருக்கு 89 கோடியே 32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us