/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிவேகமாக இயக்கப்படும் பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம்
/
அதிவேகமாக இயக்கப்படும் பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம்
அதிவேகமாக இயக்கப்படும் பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம்
அதிவேகமாக இயக்கப்படும் பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 08, 2024 09:11 AM
தேவிபட்டினம், : தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்பட்டு வரும் சில பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை, கோப்பேரிமடம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்களில் சிலர் அதிவேகமாக செல்வதால் பாதசாரிகளும், வாகன ஓட்டியிலும் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சித்தார்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பலியானார்.
அதேபோன்று சில தினங்களுக்கு முன்பு அழகன்குளம், பனைக்குளம் பகுதிகளில் அதிவேகமாக சென்ற பள்ளி வாகனங்களால் சிலர் விபத்துகளில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள், அதிவேகமாக செல்லும் பள்ளி, கல்லுாரி வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியுள்ளதை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

