/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நல்லிருக்கைக்கு முறையாக பஸ் இயக்க கோரிக்கை
/
நல்லிருக்கைக்கு முறையாக பஸ் இயக்க கோரிக்கை
ADDED : மே 08, 2025 02:29 AM
உத்தரகோசமங்கை: ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக நல்லிருக்கை கிராமத்திற்கு முறையாக டவுன் பஸ் இயக்காததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து நல்லிருக்கை செல்லும் 24ம் எண் வழித்தவ டவுன் பஸ் பழுதான நிலையில் இயக்கப்படுவதால் அடிக்கடி சாலையோரங்களில் பட்டறை போட்டு விடுகிறது. எனவே பழுது நீக்கம் செய்யப்பட்ட டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். நல்லிருக்கை விவசாயி முத்துக்குமார் கூறியதாவது:
உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் 24 எண்ணுள்ள டவுன் பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் டவுன் பஸ் பயணம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

