/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடுகுசந்தையில் காட்சி பொருளாக ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ADDED : ஆக 19, 2025 07:48 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை ஊராட்சியில் 2019ல் நிறுவப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் தற்போது வரை பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2019ல் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் அருகே கிணறு உள்ளது. கிணற்றில் இருந்து மோட்டார் பைப்லைன் மூலமாக உறிஞ்சப்பட்டு உவர்நீரை நன்னீராக மாற்றக்கூடிய ஆர்.ஓ., பிளான்ட் திட்டம் வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் திட்டம் செயல்பாட்டில் வந்த சில ஆண்டுகளில் மின் மோட்டார் திருடு போனது.
இதனால் மின்மோட்டார் பயன்பாடில்லாததால் ஆர்.ஓ., பிளான்ட் மூலமாக தண்ணீர் சுத்திகரிப்பு செய்யக்கூடிய இயந்திரம் வேலை செய்யாமல் காட்சி பொருளாகவே உள்ளது.
கிராம மக்கள் கூறியதாவது: பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் குறைந்த விலையில் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களுக்கு வழங்கினால் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.