/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கிலோ ரூ.10க்கு பரிசீலனைக்கு விற்பனை: கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு தேவை
/
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கிலோ ரூ.10க்கு பரிசீலனைக்கு விற்பனை: கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு தேவை
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கிலோ ரூ.10க்கு பரிசீலனைக்கு விற்பனை: கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு தேவை
ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கிலோ ரூ.10க்கு பரிசீலனைக்கு விற்பனை: கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு தேவை
ADDED : ஜூலை 29, 2025 12:34 AM

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவான ரேஷன் அரிசியை, கார்டுதாரர்களிடம் 10 முதல் 30 கிலோ வரை சேகரித்து கிலோ ரூ.10க்கு கொள்முதல் செய்கின்றனர். இதை தடுத்திட வருவாய்துறையினர், குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுஆகியோர் ஒருங்கிணைந்த குழு தாலுகா வாரியாக அமைக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கான குறுஞ்செய்தி வந்த பின் உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பெருவாரியான ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவாக ரேஷன் அரிசி இருந்து வரும் சூழலில், ரேஷன் அரிசி வாங்கும் ஒரு சில குடும்ப அட்டைதாரர்களிடம் நீங்கள், ரேஷன் அரிசி வாங்குங்கள்! அவற்றில் அதிக அளவு எடை சேர்ந்த பின் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறி ஒரு சில கும்பல்கள் இது போன்ற விஷயங்களில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர்.
60 கிலோ முதல் 30 கிலோ வரை எடையுள்ள மூடைகளில் ரேஷன் அரிசிகளை சேகரித்து அவற்றை கேரளா உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் போக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவு நிகழ்ந்துள்ளது. குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அலுவலருக்கு கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு, அரசு நுகர் பொருள் வாணிப குடோவுனில் ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில், ரேஷன் அரிசியை கடத்தக்கூடிய நபர்கள் அவற்றை கண்மாய் உள்ளிட்ட நடமாட்டம் இல்லாத பகுதியில் தேர்வு செய்து அவற்றை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ரேஷன் அரிசியை 50 கிலோ ரூ.500 க்கு விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.
அவற்றை மொத்தமாக வாரக் கணக்கில் சேகரித்து சட்ட விரோதமாக சரக்கு வாகனங்களின் உதவியுடன் விற்பனை செய்கின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்க கூடிய ரேஷன் அரிசியை முறையாக அனைவருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக இவற்றை விற்பனை செய்பவரை கண்டறிய தாலுகா வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டும். இதன் மூலம் சட்டவிரோத ரேஷன் அரிசி விற்பனையை கட்டுப்படுத்தலாம்.

