/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் நடைமேடை சேதம்: பக்தர்கள் அவதி
/
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் நடைமேடை சேதம்: பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் நடைமேடை சேதம்: பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் நடைமேடை சேதம்: பக்தர்கள் அவதி
ADDED : பிப் 19, 2024 10:50 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் கடற்கரை நடைமேடையின் தரைதளம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதன் பின் பக்தர்கள் பொழுதுபோக்க அக்னி தீர்த்த கடற்கரையை ஒட்டி 300 மீ.,ல் மத்திய சுற்றுலா நிதியில் 5 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் நகராட்சி நடைமேடை அமைத்தது.
இதில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று கடல் அழகை கண்டு ரசித்து இயற்கை காற்றை சுவாசித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நடைமேடை தரையில் உள்ள பேவர் பிளாக் கல் பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதில் செல்லும் மக்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே நடை மேடையை புதுப்பிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.