/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம்- -காசி ரயில் சேவை அதிகரிக்க திட்டம்
/
ராமேஸ்வரம்- -காசி ரயில் சேவை அதிகரிக்க திட்டம்
ADDED : டிச 18, 2025 01:38 AM
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு (பனாரஸ்) இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
காசி, ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் 15 ஆண்டுகளாக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. பனாரசில் புறப்படும் ரயில் ஆன்மிக நகரங்களான பிரயாக்ராஜ், மேல்மருவத்துார், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக ராமேஸ்வரம் வந்தடைகிறது. வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வரும் பயணிகளின் முதல் தேர்வாக இந்த ரயில் உள்ளது.
தற்போது வாராந்திர ரயிலாக உள்ளதால் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவில் நிரம்பி விடுகின்றன. இதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வாரணாசி ரயில்வே கோட்டம் இதை முன்மொழிந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக ராமநாதபுரம் ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

