/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், ராமர் கோயில் ரூ. 156 கோடியில் மறு சீரமைப்பு பணி

UPDATED : அக் 11, 2024 06:08 AM
ADDED : அக் 11, 2024 03:02 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, பர்வதம் கோதண்டராமர் கோயிலில் ரூ.156 கோடியில் மறுசீரமைப்பு பணிகளை செய்வது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் ஆய்வு செய்தார்.
நேற்று இக்கோயிலுக்கு வந்த கூடுதல் ஆணையர் சுகுமார் பிரகாரத்தில் உள்ள துாண்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின் அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.60 கோடியில் படிக்கட்டுகள், அலங்கார வளைவுகளுடன் மேடை தளம், கழிப்பறை அமைக்கும் பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
மேலும் இக்கோயிலின் துணை கோயிலான கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் கோயிலை ரூ.72 கோடியில் மறுசீரமைக்கவும், தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ரூ.2.48 கோடியில் மறுசீரமைப்பு செய்ய உள்ளதால் அப்பகுதியையும் பார்வையிட்டார்.
பின் கோயில் தக்கார் பாரதி, இணை ஆணையர் சிவராம்குமார், சிவகங்கை மண்டல செயற்பொறியாளர் சிவராணி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.