/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம்: சிவாலயங்களில் சிவராத்திரி விழா
/
ராமநாதபுரம்: சிவாலயங்களில் சிவராத்திரி விழா
ADDED : மார் 09, 2024 08:42 AM
திருவாடானை : சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் பூஜைகள் நடந்தது.மகா சிவராத்திரி சிவனுக்குரிய விரத நாள். மாசி மாதத்தில் சதுர்த்தசி திதி இரவில் இவ்விழா நடைபெறும். நேற்று சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா நடந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.
அதே போல் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களிலும் மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிேஷகங்கள் நடந்தன.
பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப்பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம்: மாசி மஹா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் கங்கை நீருடன் ஊர்வலமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கங்கை நீருடன் ஊர்வலம்
நேற்று மாசி மஹா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா சேவா மடத்தில் இருந்து பாபா சீதாராம்தாஸ் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலசத்தில் புனித கங்கை நீரை எடுத்துக் கொண்டு கோயில் சன்னதி தெரு, கோயில் 3ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்தனர். பின் சுவாமிக்கு புனித கங்கை நீரில் அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.
இரவு முழுவதும் தரிசனம்
நேற்று 8ம் நாள் மாசி திருவிழாவில் கோயிலில் இருந்து காலை 9:00 மணிக்கு கேடயத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்றனர்.
அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முழுவதும் கோயில் நடை திறந்து இருந்ததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

