/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பரங்குன்றம் தீபத்திற்கு டில்லியில் போராட்டம்: புரோகிதர்கள் மகாசபை முடிவு
/
திருப்பரங்குன்றம் தீபத்திற்கு டில்லியில் போராட்டம்: புரோகிதர்கள் மகாசபை முடிவு
திருப்பரங்குன்றம் தீபத்திற்கு டில்லியில் போராட்டம்: புரோகிதர்கள் மகாசபை முடிவு
திருப்பரங்குன்றம் தீபத்திற்கு டில்லியில் போராட்டம்: புரோகிதர்கள் மகாசபை முடிவு
ADDED : டிச 14, 2025 02:39 AM

ராமேஸ்வரம்: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்துவோம் என அகில பாரதிய தீர்த்த புரோகிதர்கள் மகாசபையினர் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் அகில பாரதிய தீர்த்த புரோகிதர்கள் மகாசபை நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராமேஸ்வரம், உ.பி., அலகாபாத், ஹரித்துவார், ஒடிசா ஆகிய தீர்த்த தலங்களின் புரோகிதர்கள் 500 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் தீர்த்த தல கோயில்களில் புரோகிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட மாநில அரசி ன் ஆன்மிக வழிபாட்டு முறை மீறல், அதற்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடினர்.
இதுகுறித்து மகாசபை தலைவர் மகேஷ் பாடக் கூறியதாவது :
சனாதனத்தை ஒழிக்க துடிக்கும் தமிழக அரசு கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வருமானம் ஈட்டுகிறது. மசூதி, சர்ச் நிலங்களை அரசு ஆக்கிரமிப்பது இல்லை. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பார்லிமென்டில் செய்திக்காக தி.மு.க., எம்.பி.,க்கள் கோஷமிடுகின்றனர். ஜனநாயகம், நீதித்துறையை தி.மு.க., அரசு மிரட்டுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுமுக தீர்வு கண்டு தீபம் ஏற்றாவிடில் தமிழக அரசை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்துவோம். சுற்றுலா தலங்களில் அனைத்து ஜாதியினரும் பூஜை செய்யலாம். ஆனால் கோயில்களில் முறைப்படி பயிற்சி பெற்ற புரோகிதர்கள் மட்டுமே பூஜை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து கலந்துரையாடி போராட்டம் குறித்து அறிவிப்போம் என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், நிர்வாகி அரவிந்த், புரோகிதர்கள் பலர் பங்கேற்றனர்.

