/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இனிமேல் வாரச்சந்தை செயல்படாது போலீசார், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு

ADDED : டிச 17, 2025 05:24 AM
சத்திரக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை சத்திரக்குடியில் இயங்கி வரும் வாரச்சந்தை குறித்து தொடர்ந்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில் போலீசார், வியாபாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரிய இடத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
போகலுார் ஒன்றியம் சத்திரக்குடி பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு சந்தைக்கு தனி இட வசதி இருந்தும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே கடைகள் விரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து அவ்வப்போது 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
தொடர்ந்து நேற்று பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் போகலுார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. போகலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வரவேற்றார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் விரிக்கப்படும் கடைகள் உரிய இடத்தில் நடத்தப்படும். ரோட்டோரங்களில் டூவீலர்கள் நிறுத்துவதை முறைப்படுத்த இடம் ஒதுக்கப்படும். வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர். வர்த்தக சங்கத் தலைவர் கிருஷ்ணன், வி.ஏ.ஓ., ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.