/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதார் மையத்தில் காத்திருந்து ராமநாதபுரம் மக்கள் அவதி
/
ஆதார் மையத்தில் காத்திருந்து ராமநாதபுரம் மக்கள் அவதி
ஆதார் மையத்தில் காத்திருந்து ராமநாதபுரம் மக்கள் அவதி
ஆதார் மையத்தில் காத்திருந்து ராமநாதபுரம் மக்கள் அவதி
ADDED : ஏப் 09, 2025 06:18 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு, புகைப்படம் எடுக்க நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், தாலுகா வளாகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம் மூலம் நிரந்தர ஆதார் சேர்க்கை இ--சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் தினமும் வருகின்றனர்.
முதலில் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கி புகைப்படம் எடுக்கின்றனர். அதன்பின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதம் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால் ஆதார் பதிவு மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைவாக கைரேகை பதிவு, புகைப்படம் எடுக்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

