/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் ஒரே நாளில் 17 மீ. நகர்த்தப்பட்டது
/
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் ஒரே நாளில் 17 மீ. நகர்த்தப்பட்டது
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் ஒரே நாளில் 17 மீ. நகர்த்தப்பட்டது
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் ஒரே நாளில் 17 மீ. நகர்த்தப்பட்டது
ADDED : மார் 13, 2024 12:58 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலத்தை நகர்த்தும் பணி துவங்கியது. ஒரே நாளில் 17 மீ., மட்டுமே நகர்த்த முடிந்தது.
பாம்பன் கடலில் பழைய ரயில் பாலம் அமைக்கப்பட்டு 1914 பிப்., 24ல் பயன்பாட்டிற்கு வந்தது. பழமையான இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் சில நேரம் இரும்பு பிளேட்டில் விரிசல், சேதம் ஏற்பட்டதால் இருமுறை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 2022 ஜன.,ல் ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணியை மத்திய அரசு துவக்கியது. இந்நிலையில் 2022 நவ., 23ல் துாக்கு பாலம் முழுவதும் பலமிழந்ததால் போக்குவரத்தை ரயில்வே அமைச்சகம் நிறுத்தியது.
இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடந்தது. 1.5 கி.மீ.,க்கு பாலம் பணி முடிவடைந்தது. மீதமுள்ள 500 மீ.,ல் துாண்கள் அமைத்து அதன் மீது இரும்பு கர்டர், தண்டவாளம் பொருத்தாமல் நிலுவையில் இருந்தது. இதற்கு காரணம்புதிய துாக்கு பாலம் வடிவமைக்கும் பணி பாம்பன் கிழக்கு கடற்கரையில் நடந்தது தான்.
புதிய துாக்கு பாலத்தை 550 டன்னில் வடிவமைக்க ரயில்வே பொறியாளர்கள் திட்டமிட்ட நிலையில் 100 சதவீதம் பணிகள் முடிந்ததும் 700 டன்னாக அதிகரித்தது. இதனை நகர்த்த பொறியாளர்கள் ஆலோசித்த நிலையில் நேற்று 'ஹைட்ராலிக் லேண்டிங் கர்டர்' என்ற இயந்திரத்தால் புதிய துாக்கு பாலத்தை நகர்த்தினர். இதில் 17 மீ., மட்டுமே நேற்று நகர்த்த முடிந்தது. இதனை 500 மீ., நகர்த்தி செல்ல 30 நாள்கள் நீடிக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.-

