/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 20, 2025 06:49 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் இரவு முழுவதும் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் நேற்று முன்தினம் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் விட்டனர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமை வகித்தார். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிப்பது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, கொரோனா காலத்தில் பணிசெய்த அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னையில் கைது செய்த செவிலியர்களை இரவில் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

