/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரப்பன்வலசை கடலில் தேசிய அலை சறுக்கு போட்டி
/
பிரப்பன்வலசை கடலில் தேசிய அலை சறுக்கு போட்டி
ADDED : செப் 29, 2024 11:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கடலில் அலை சறுக்கு தேசிய சாம்பியன் போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம், இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு, கியுஸ்ட் அகாடமி சார்பில் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியில் ஆண்டு தோறும் அலை சறுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டு செப்.,28, 29ல் பிரப்பன் வலசையில் நின்ற நிலை துடுப்பு படகு (அலை சறுக்கு) போட்டியில் 200 மீ., 12 கி.மீ., 14 கி.மீ., துாரம் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, குஜராத், காஷ்மீர், மஹாராஷ்டிரா ஆகிய ஏழு மாநிலங்களில் இருந்து 16 வயதிற்குட்பட்ட 11 பெண்கள் உட்பட 120 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெறுபவர்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள், என ஒருங்கிணைப்பாளர் ரோஜர் தெரிவித்தார்.

