/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைன் ரம்மியில் ரூ.2.30 லட்சம் இழந்த பால் வியாபாரி தலைமறைவு
/
ஆன்லைன் ரம்மியில் ரூ.2.30 லட்சம் இழந்த பால் வியாபாரி தலைமறைவு
ஆன்லைன் ரம்மியில் ரூ.2.30 லட்சம் இழந்த பால் வியாபாரி தலைமறைவு
ஆன்லைன் ரம்மியில் ரூ.2.30 லட்சம் இழந்த பால் வியாபாரி தலைமறைவு
ADDED : நவ 12, 2024 04:50 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.2.30 லட்சத்தை இழந்த தால் விரக்தியில் தலைமறைவான பால் வியாபாரி 13 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.
திருவாடானை அருகே திருவெற்றியூர் அன்னைநகரை சேர்ந்தவர் வின்சென்ட் ஆரோக்கியசாமி 43. இவர் அக்கிராமத்தில் பால், ஜவுளிக்கடை நடத்துகிறார். அக்.29 மதியம் 12:00 மணிக்கு வீட்டில்இருந்து டூவீலரில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி சுஜி 39, புகாரில் தொண்டி போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் வீரசங்கிலிமடம் அருகே வின்சென்ட் ஆரோக்கியசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் இருந்தது. போலீசார் அவரது அலைபேசியை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுஇருந்தது.
பல நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் உறவினர்கள், நவ.1ல் திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் அமர்நாத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த போது ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்திருப்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வின்சென்ட் ஆரோக்கியசாமி வீடு திரும்பினார். அதன் பின் அவர் தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார்.
போலீசார் கூறியதாவது:
வின்சென்ட் ஆரோக்கியசாமி அக்.28, 29ல் 'சிக்வின்,பெட்டிஸ்டா' ஆகிய இரு பெயரிலான ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் ரூ.2.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தஞ்சாவூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தவர் தற்போது வீடு திரும்யிருப்பதாக தெரிவித்தனர்.

