/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
/
ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
ADDED : ஜூலை 25, 2025 02:15 AM
ராமநாதபுரம்:''மார்க்சிஸ்ட் தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்தக் கட்சி தலைமையிலான ஆட்சியிலும் பங்கு கேட்க மாட்டோம் ''என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போது பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது கண்டிக்கதக்கது. மதுரை ஆதினம் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வறட்சி மாவட்டங்களில் காவிரி -வைகை -குண்டாறு வைப்பாறு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் பணியை முடிக்க வேண்டும்.
பா.ஜ., உடன் அணிசேர்ந்து நிற்கும் வரை வேறு எந்த கட்சியும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேராது. அதனுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க.,வின் நலனுக்கு விரோதமானது. அதற்கான முன்னுதாரணம் பல உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல், யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்ற விரக்தியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னுக்குபின் முரணாக பேசுவது அவரின் மீதான மதிப்பை குறைக்கும். முதலில் அ.தி.மு.க.,வை ஒன்று சேர்க்க வேண்டும்.
பா.ஜ., உட்கட்சி பூசல் காரணமாக தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது.
எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் பங்கு கேட்க மாட்டோம். த.வெ.க., தனது கொள்கை முடிவை அறிவித்துள்ளது. அதனுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றார்.

