ADDED : மே 02, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பெருமானேந்தல் சத்தியா 30. இவருக்கு சொந்தமான ஆட்டை வீட்டு முன் கட்டியிருந்தார். நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு ஒருவர் டூவீலரில் ஆட்டை திருடிச் சென்றார். இதைபார்த்த சத்தியா கூச்சலிட்டார். அருகில் நின்றவர்கள் மற்றொரு டூவீலரில் விரட்டிச் சென்று திருவெற்றியூர் காடாங்குடி விலக்கு ரோட்டில் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., விஷ்ணு விசாரணை செய்ததில் ஆர்.எஸ்.மங்கலம் வல்லமடை ரூபன் செல்லத்துரை 34, என தெரிய வந்தது. போலீசார் கைது செய்தனர்.
ரூபன் செல்லத்துரை ஆடுகள் திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.

