/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
/
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
ADDED : மார் 21, 2024 01:54 AM

ராமநாதபுரம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 20 முதல் 27 வரை வேட்பு மனுதாக்கல் நடக்கிறது நேற்று முதல் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகநுழைவுப்பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்துபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 மீட்டர் தொலைவில் வேட்பாளருடன் 5 பேர் மற்றும் மூன்று வாகனங்களுக்கு மேல் செல்வற்தகு அனுமதி இல்லை.காலை 11:00மணிக்கு துவங்கி மதியம் 3:00மணி வரைவேட்பு மனு தாக்கல் நடக்கிறது. நேற்று வேட்பு மனு விண்ணப்ப படிவங்கள்கட்டணமின்றி பலர் வாங்கி சென்றனர். அதேசமயம் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியுள்ளதாவது: வேட்புமனு தாக்கல் செய்யும்போது வைப்புத் தொகையாகரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடி வகுப்பினர் பாதிக்கட்டணம் செலுத்தினால் போதும்.
ஒவ்வொரு நாளிலும் பெறப்படும் வேட்புமனுக்கள் மற்றும்வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரங்கள்கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.
வலைதளத்திலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுசனி, ஞாயிறு (மார்ச் 23, 24) விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. என்றார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு நுழைவுப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

