/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தைகளில் எடை மோசடியா: : டிஜிட்டல் இயந்திரத்தை ஆய்வு செய்யுங்கள்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தைகளில் எடை மோசடியா: : டிஜிட்டல் இயந்திரத்தை ஆய்வு செய்யுங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தைகளில் எடை மோசடியா: : டிஜிட்டல் இயந்திரத்தை ஆய்வு செய்யுங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தைகளில் எடை மோசடியா: : டிஜிட்டல் இயந்திரத்தை ஆய்வு செய்யுங்கள்
ADDED : டிச 13, 2024 04:00 AM
சாயல்குடி: வாரச்சந்தைகளில் எடை மோசடி நடப்பதாகவும், அங்கு பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் எடை இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, சத்திரக்குடி, சாயல்குடி, கடலாடி, சிக்கல், கமுதி, முதுகுளத்துார், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாரம் ஒரு முறை குறிப்பிட்ட தினங்களில் வாரச்சந்தைகள் நடத்தப்படுகின்றன.
இங்கு எடை கற்கள், அளவைகளை பயன்படுத்தி தராசில் எடை போட்டு, அளவைகளில் அளந்து விற்பனை செய்தனர். நாளடைவில் அவற்றில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் எடை கற்களை வைத்து தராசு பயன்படுத்துவதை தவிர்த்து பெரும்பாலானோர் எலக்ட்ரானிக் எடை இயந்திரங்களுக்கு மாறி விட்டனர். வாரச்சந்தை நடக்கும் இடங்களில் கடைகளில் சமீப காலமாக எடை அளவு குறைவாக இருப்பதாக நுகர்வோர், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாயல்குடியை சேர்ந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பெத்தராஜ் கூறியதாவது: எலக்ட்ரானிக் எடை இயந்திரங்களை பயன்படுத்தும் போது அவை சரியான எடை அளவில் இருப்பது வழக்கம். ஒரு சில சந்தை கடைகளில் சாலையோர வியாபாரிகள் டிஜிட்டல் மீட்டரில் எடை அளவை கூட்டி வைத்து சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு 100 முதல் 150 கிராம் வரை எடை குறைவு ஏற்படுகிறது. பொதுமக்கள் இதை அறியாமல் வாங்கிச் செல்கின்றனர். எனவே இது போன்ற எடை குறைபாடுகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சந்தைகளில் விற்கப்படும் பொருள்களுக்கான எடையை அளவிட உரிய முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் அபராதம் விதித்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

