/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
வாரச்சந்தை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
வாரச்சந்தை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
வாரச்சந்தை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2024 10:46 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தையை ஒட்டிய வாய்க்காலில் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்லும் எட்டாம் எண் வாய்க்கால் வாரச்சந்தை வழியாக செல்கிறது. அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்த நிலையில் வாய்க்கால் அளவில் சுருங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.