/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதி இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம் பிப்.29 கடைசி நாள்

ADDED : பிப் 26, 2024 12:51 AM
திருப்புல்லாணி : அனுமதியற்ற மனைப்பிரிவு மனைகளை வரன்முறைப்படுத்த 2017ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு விருப்பமுள்ளவர்கள் 2024 பிப்.29 வரை விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் ஹரி இளம்வழுதி கூறியதாவது:
கடந்த 2016 அக்.20 அல்லது அதற்கு முன் பதிவு செய்த மனைப்பிரிவில் அமையும் விற்றது, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தலாம்.
அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 2024ம் ஆண்டு பிப்.29 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் பிப்.29. இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.