/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி போராட்டம்
/
விவசாயிகள் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி போராட்டம்
விவசாயிகள் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி போராட்டம்
விவசாயிகள் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி போராட்டம்
ADDED : டிச 20, 2025 06:44 AM

கமுதி: கமுதி தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நெல், மிளகாய் விவசாயத்திற்கு பயிர் காப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் போராட்டம் நடந்தது.
கமுதி வட்டாரத்தில் 2024 -25ம் ஆண்டு பெய்த மழை மற்றும் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கவும், முழுமையான தேசிய வேளாண் பயிர் காப்பீடு தொகை வழங்கவும், கமுதி வட்டாரத்தில் கூட்டுறவு கடன்கள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அனைவரும் காதில் பூ வைத்து திருவோடு ஏந்தி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் விவசாயிகள் மூன்று அம்ச கோரிக்கை மனுவை தாலுகா அலுவலகத்தில் வழங்கினர்.
கவுரவத் தலைவர் மிக்கேல், மகளிரணி ராமலட்சுமி, மாவட்ட செயலாளர் மரகதவேல் உட்பட கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

