/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பள்ளியில் கழிப்பறை, குடிநீர் இல்லாததால் மாணவர்கள் சிரமம்
/
அரசுப்பள்ளியில் கழிப்பறை, குடிநீர் இல்லாததால் மாணவர்கள் சிரமம்
அரசுப்பள்ளியில் கழிப்பறை, குடிநீர் இல்லாததால் மாணவர்கள் சிரமம்
அரசுப்பள்ளியில் கழிப்பறை, குடிநீர் இல்லாததால் மாணவர்கள் சிரமம்
ADDED : பிப் 19, 2024 05:18 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.
சாம்பக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் பொழிகால், சாம்பக்குளம், கே.ஆர்.பட்டினம் உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 68 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு தனித்தனியாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதியும் இல்லை.இதனால் மாணவர்கள்சிரமப்படுகின்றனர்.
கழிப்பறை வசதி இல்லாததால் வீட்டிற்கு செல்லும் அவலநிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறையும் சேதமடைந்து இடிந்து விழுந்தது.
அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் கார்த்திகாகூறியதாவது:
சாம்பக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தற்போது போதுமான அடிப்படை வசதி இல்லாததால் 68 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இங்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாததால்மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கழிப்பறைக்காக மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. போதுமான துப்புரவுப் பணியாளர் இல்லாததால் மாணவர்களே பள்ளியை சுத்தம் செய்கின்றனர். சொந்த செலவில் செலவு செய்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அங்குள்ள போர்வெல் காட்சிப்பொருளாக உள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஏராளமானோர் தனியார் பள்ளி செல்லம் அவலநிலை உள் ளது.
எனவே அரசு அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

