/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்துார்வாடி 3 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
/
சித்துார்வாடி 3 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சித்துார்வாடி 3 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சித்துார்வாடி 3 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ADDED : பிப் 20, 2024 11:29 PM
ராமநாதபுரம் - சித்துார் ஊராட்சியில் மேலச்சித்துார்வாடி, வெட்டுக்குளம், உகந்தான்குடி ஆகிய கிராமங்களில் குழாய் பராமரிப்பு பணிகாரணமாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சித்துார்வாடிஊராட்சி மேலச்சித்துார்வாடி, வெட்டுக்குளம்மற்றும் உகந்தான்குடி ஆகிய மூன்று கிராமங்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள்உள்ள நீரேற்றும் நிலையத்திலிருந்து காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்கண்ட 3கிராமங்களுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய் 1.5 கி.மீ.,நீளத்திற்கு சேதமடைந்துள்ளதால் தற்போது குடிநீர்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் உப்பூர் நீரேற்றும்நிலையத்திலிருந்து தனியாக 63 மி. மீ., அளவுள்ள பகிர்மானகுழாய்கள் அமைப்பதற்கு மறு சீரமைப்பு பணிகள்நடக்கிறது.
இப்பணிகள் விரைவில் முடித்து மூன்றுகிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் விரைவில்வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

