/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஆற்றுப்பாலத்தில் முளைக்கும் மரத்தால் ஆபத்து
/
பரமக்குடி ஆற்றுப்பாலத்தில் முளைக்கும் மரத்தால் ஆபத்து
பரமக்குடி ஆற்றுப்பாலத்தில் முளைக்கும் மரத்தால் ஆபத்து
பரமக்குடி ஆற்றுப்பாலத்தில் முளைக்கும் மரத்தால் ஆபத்து
ADDED : பிப் 03, 2024 04:58 AM

பரமக்குடி : -பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் ஆற்றுப்பாலத்தில் மரங்கள் முளைப்பதால் பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி வழியாக எமனேஸ்வரம், இளையான்குடி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதானமாக வைகை ஆற்றுப் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் முன்பு இருந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாலத்தில் ரோடு அவ்வப்போது சேதமடைகிறது. மேலும் ஆங்காங்கே மரங்கள் முளைத்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
பாலத்தின் கீழ்பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதுடன் கழிவு நீர் ஆண்டு முழுவதும் கலக்கிறது. இதனால் சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட தேவையற்ற செடி, கொடி, மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் பாலம் பலம் இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே வாகனங்களின் பிரதான போக்குவரத்து பகுதியாக உள்ள வைகை ஆற்றுப் பாலத்தை முற்றிலும் சீரமைத்து வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

