ADDED : மார் 14, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: -ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் முதலாவது பிரதிஷ்டை விழா கொண்டாடப்பட்டது.
முதல் கும்பாபிஷேகம் 2005 மார்ச் மாதம், இரண்டாவது கும்பாபிஷேகம் 2017 செப்.15ல் நடந்தது.
முதலாவது பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு மூலவர்கள் வல்லபை விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் சுவாமி செய்திருந்தார்.
ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

