/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்
/
பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்
பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்
பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்
ADDED : நவ 04, 2025 04:02 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இரு தரப்பு மோதலையடுத்து ஆங்காங்கே பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமனுார் கிராமத்தில் ஒரு தரப்பினர் போர்டு வைத்த நிலையில், நேற்று காலை மற்றொரு தரப் பினர் அகற்ற கூறினர். இதனால் ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறியதால் அவர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணி முதல் பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் ஒரு தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உரு வாகியதால் கடைகள் அடைக்கப்பட்டன.
இதேபோல் மற்றொரு தரப்பினர் நயினார் கோவில் விலக்கு ரோடு மற்றும் பர்மா காலனி பகுதியில் ரோடு மறியல் செய்தனர்.
ராமநாதபுரம் எஸ்பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

