/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க டிச.15ல் அறவழி போராட்டங்கள்
/
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க டிச.15ல் அறவழி போராட்டங்கள்
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க டிச.15ல் அறவழி போராட்டங்கள்
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க டிச.15ல் அறவழி போராட்டங்கள்
ADDED : டிச 13, 2025 05:15 AM
சிக்கல்: சிக்கல் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தி டிச.,15ல் போராட்டங்கள் நடக்கிறது.
கடந்த ஆட்சியில் கடலாடி யூனியனை பிரித்து 110 விதியின் கீழ் புதிய சிக்கல் ஊராட்சி ஒன்றியமாக அறிவிப்பது குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. 75 ஆண்டு கால கோரிக்கையாக முதுகுளத்துார் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் அரசு விழாக்கள் மற்றும் மேடைகளில், சிக்கல் பகுதி பொதுமக்களிடம் சிக்கல் ஒன்றியமாக அறிவிக்க அரசு சார்பில் அனைத்து துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது என வலியுறுத்தி கூறியுள்ளார் என சிக்கல் ஒன்றிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் கூறியதாவது:
சிக்கல் புதிய ஊராட்சி ஒன்றியத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்கள் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட உள்ளன. டிச., 15 காலை 10:00 மணிக்கு சிக்கல் பகுதியில் உள்ள 25 ஊராட்சி உட்கடை கிராம பொதுமக்களை திரட்டி கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி எதிர்ப்பு போராட்டம் நடக்க உள்ளது.
கீழச்செல்வனுார், வாலிநோக்கம், இதம்பாடல், சிக்கல், ஏர்வாடி போன்ற இடங்களில் கடைகள் வணிக வளாகங்கள் அடைக்கப்படும். ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சிக்கல் ஊராட்சி ஒன்றியம் தொடர்பாக மாவட்ட அரசிதழில் அரசாணை வழங்கிடும் வரை தொடர்ந்து 100 நாட்கள் வரை தெரிவு செய்யப்பட்ட இடத்தில் அறவழிப் போராட்டம் நடக்கும்.
டிச., 8ல் தமிழக அரசு புதிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியலில் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் விடுபட்டுள்ளதால் தடையாணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

