/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வணிகர்கள் உரிய ஆவணமின்றி பணம் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் வணிகர் சங்கங்கள் வலியுறுத்தல்

ADDED : மார் 19, 2024 05:21 AM

சாயல்குடி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொருட்கள், பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் துணைத் தலைவர் சாயல்குடி எம்.பெத்தராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வணிகர்கள் வசூலை 100 சதவிகிதம் பணமில்லாத வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மேற்கொள்ளலாம்.
வெளியூர் ரொக்க வசூலை அங்கேயே வங்கியில் செலுத்திடவும் செய்யலாம். சாயல்குடி நகரில் இரவு நேரங்களில் ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் பணம், பொருள்களை கேட்டு ரவுடிகள் தொந்தரவு செய்கின்றனர்.
இதை தடுக்க போலீசார் இரவு நேரம் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வணிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் ரூ.45 முதல் ரூ.49 ஆயிரம் வரை கொண்டு சென்றாலும் அப்பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.
எனவே உரிய வழிகாட்டுதல் நெறிமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.