/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் நகராட்சியில் ப்ளீச்சிங் பவுடர் சுண்ணாம்பு பவுடர் மூடைகள் வீணாகியது வரிப்பணம் ரூ.5 லட்சம் விரையம்

ADDED : டிச 13, 2024 04:16 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி கூடத்தில் இருந்த ப்ளீச்சிங், சுண்ணாம்பு பவுடர் மூடைகள் மழையில் நனைந்து வீணாகியதால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் கழிவுநீர், குப்பை தேங்கும் பகுதியில் கிருமிகள் பரவாமல் தடுக்க ப்ளீச்சிங் மற்றும் சுண்ணாம்பு பவுடரை துாவுகின்றனர்.
இதில் முக்கிய பிரமுகர்கள் வரும் சாலையின் இருபுறத்திலும் சுண்ணாம்பு பவுடரை நகராட்சி ஊழியர்கள் துாவி விடுவார்கள். இதற்காக ஓராண்டில் ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடரை பல லட்சம் செலவில் கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி குப்பையை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இதனுள் 400க்கும் மேற்பட்ட ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்த கூடம் தகர சீட்டில் உள்ளதால் உப்புக்காற்றில் சீட் துருப்பிடித்து சேதமடைந்தது.
இதனால் கடந்த 5 மாதமாக திறந்த வெளியில் மூடைகள் கிடந்த நிலையில் இதனை பயன்படுத்தவோ, பாதுகாக்கவோ அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் சமீபத்தில் பெய்த கனமழையில் மூடைகள் நனைந்தது.
சுண்ணாம்பு மூடைகள் இறுகி கல் முடையாகவும், ப்ளீச்சிங் பவுடர் மூடைகள் கரைந்து முழுமையாக வீணாகியதால் மக்கள் வரி பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டது.
தமிழக அரசு விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுண்ணாம்பு பவுடர், ப்ளீச்சிங் பவுடர் மூடைகள் வீணாகிப் போனதா என ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.