தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பி.எட்., கணினி அறிவியல் படித்த

பி.எட்., கணினி அறிவியல் படித்த

பி.எட்., கணினி அறிவியல் படித்த


ADDED : பிப் 14, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மத்திய அரசு கணினி அறிவியல் கல்விக்காக வழங்கும் நிதியை முறையாக பயன்படுத்தாமல் தி.மு.க., அரசின் ஏமாற்று வேலையால் 60ஆயிரம் பேர் வேலையின்றி சிரமப்படுகிறோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.

சங்க மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் கூறியதாவது:

மத்திய அரசு கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கவும், கணினி ஆசிரியர்கள் நியமிக்கவும் ரூ. பல கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினியும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினியும் கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் இல்லம் தேடி கல்வியில் பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும் முறையாக சம்பளம் வழங்காததால் மாவட்டந்தோறும் போராடி வருகின்றனர்.கம்ப்யூட்டர் பாடம் தனியாக இல்லாத நிலையில் கணினி பயிற்றுநர்கள் இருப்பதாக இணையதளத்தில் பதிவு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மத்திய அரசை ஏமாற்றி நிதிபெற்றுள்ளனர்.

பல கணினி ஆய்வங்கள் செயல்படாததால் அரசு பள்ளிமாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினிஅறிவியல் பாடத்தில் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்.பிற மாநிலங்களில் உள்ளது போல் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து கணினி படித்த பட்டதாரி ஆசிரியர்களைநியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கணினி ஆய்வகங்கள் அமைத்துகணினி அறிவியல் கல்வி முறையாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இந்த நவீன காலத்திலும் கணினி அறிவியல் பாடத்திற்கு தமிழக அரசுப்பள்ளிகளில் பாடமும் இல்லை. பாடப்புத்தகமும் இல்லை. தி.மு.க., அரசின் ஏமாற்று வேலையை கண்டித்தும், போராடியும் எந்த பலனும் இல்லை. எங்களை 4 ஆண்டுகளாக வஞ்சித்த தி.மு.க.,விற்கு 2026 சட்டசபை தேர்தலில் ஓட்டு மூலம் பதிலடி தருவோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us