தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்


ADDED : மார் 15, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு பணிகள் நடக்கிறது.

திருவாடானை தொகுதி யில் 378 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இங்கு வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வந்து செல்ல தேவையான வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தடையின்றி இயங்கவும், இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இருக்க மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என சரிபார்க்கப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வாக் காளர்களுக்கு தடையற்ற குடிநீர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எவ்வித உதவியின்றி சுலபமாக ஓட்டுச் சாவடிக்குள் சென்று வர சாய்வு தளங்கள், பள்ளி கட்டடங்களின் கூரை, தரைதளம் போன்றவை வலுவாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், இந்த ஆய்வு பணியின் போது கண்டறியப்படும் குறைகளை உடனுக்குடன் சரி செய்ய அந்தந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us