/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மன் பட்டி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தல்
/
அம்மன் பட்டி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தல்
அம்மன் பட்டி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தல்
அம்மன் பட்டி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2024 03:49 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் விவசாயம் செய்யும் அம்மன்பட்டி விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கமுதி அருகே அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச்செயலளர் மலைச்சாமி குழுவினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கமுதி அருகேயுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலம் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது. ஆனால் முகவரி விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளது. இதனால் ராமநாதபுரம் கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்க மறுக்கின்றனர்.
கூட்டுறவு வங்கி கணினி பட்டாவில் ஆன்-லைனில் பதிவு செய்ய இயலவில்லை என்கின்றனர். இதனால் பயிர்கடன் பெற முடியாமல் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்ய முடியவில்லை. எனவே உடனடியாக பயிர்கடன் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

