/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் படகில் 3 டன் சூடை மீன்கள் வரத்து: மீனவர்கள் மகிழ்ச்சி
/
பாம்பன் படகில் 3 டன் சூடை மீன்கள் வரத்து: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பன் படகில் 3 டன் சூடை மீன்கள் வரத்து: மீனவர்கள் மகிழ்ச்சி
பாம்பன் படகில் 3 டன் சூடை மீன்கள் வரத்து: மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 28, 2024 01:17 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவரின் பைபர் கிளாஸ் படகில் 3 டன் சூடை மீன்கள் சிக்கியது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பாம்பனில் இருந்து பைபர் கிளாஸ் படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் காலை 10:00 மணிக்கு பாம்பன் கரை திரும்பினர்.
இதில் ஒரு படகில் 3 டன்சூடை மீன்கள் சிக்கியது. இந்த மீன்கள் பிரஷ்சாக இருந்ததால் பாம்பன் வியாபாரிகள் போட்டி போட்டு கிலோ ரூ.75க்கு வாங்கினர். அவற்றை ஐஸ்சில் பதப்படுத்தி கேரளா, கன்னியாகுமரி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
சூடை மீன்களுக்கு உரிய விலை கிடைத்து ஒரே படகில் ரூ.2.25 லட்சத்திற்கு மீன்கள் விற்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.