/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலையோர மரங்களில் வர்ணம் பூசும் பணியாளர்கள்
/
நெடுஞ்சாலையோர மரங்களில் வர்ணம் பூசும் பணியாளர்கள்
ADDED : மார் 26, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : நெடுஞ்சாலையோர மரங்களுக்கு சாலைப்பணியாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.
திருவாடானை தாலுகாவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை பகுதியில் எஸ்.பி.பட்டினம், தொண்டி, மங்களக்குடி, திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் 2000 மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.
அதற்கான பணிகளில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிழல் தரும் இந்த மரங்களை யாரும் வெட்டி விடக் கூடாது என்பதற்காக வர்ணம் பூசப்படுகிறது என்றனர்.

