/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிக்கு ஓட்டளித்து என்ன பயன்: ஜான்பாண்டியன் பேச்சு
/
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிக்கு ஓட்டளித்து என்ன பயன்: ஜான்பாண்டியன் பேச்சு
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிக்கு ஓட்டளித்து என்ன பயன்: ஜான்பாண்டியன் பேச்சு
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிக்கு ஓட்டளித்து என்ன பயன்: ஜான்பாண்டியன் பேச்சு
ADDED : ஏப் 10, 2024 05:56 AM
கமுதி, : பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிக்கு வாக்களித்து என்ன பயன் என்று த.ம.மு.க., நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கமுதி அருகே செங்கோட்டைபட்டியில் த.ம.மு.க., நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.அவர் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவரும், தேவேந்திரரும் ஒற்றுமையாக இருப்பதற்கு வழிவகுக்கும் தேர்தலாக இது அமைந்துள்ளது. அரசியல் சூழ்ச்சியால் நம் இருவரையும் பிரித்து சேரவிடாமல் வைத்திருந்தது தி.மு.க., தான்.
அந்த நிலையை மாற்றுவதற்கு பன்னீர்செல்வம், ஜான்பாண்டியன் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன் எம்.பி.,யாக இருந்த நவாஸ்கனி இந்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் ஏதாவது செய்துள்ளாரா. இப்போது மீண்டும் ஓட்டு கேட்டு வருகிறார்.
தேவரும் தேவேந்திரரும் விட மாட்டார்கள். இனிமேல் அந்த நிலை மாற வேண்டும் என்றால் பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கிறார்.
தி.மு.க., கூட்டணியில் யார் பிரதமராக உள்ளார் என்று கேள்வி கேளுங்கள். இரட்டை இலையை பிடித்துக்கொண்டு கட்சியை மூன்றாக உடைத்துவிட்டு எல்லாம் நான் தான் என்று கூறிவரும் பழனிச்சாமியிடம் கேளுங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று.
பிரதமர் வேட்பாளரே இல்லாமல் பார்லிமென்டிற்கு போய் இவர்களுக்கு என்ன வேலை உள்ளது. அங்கே ஒரு வேலையும் கிடையாது. வேலையே இல்லாமல் வெட்டியா போறதுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறுவதற்கு இப்போதுதான் சரியான வேட்பாளர் கிடைத்துள்ளார்.
சேவை மனப்பான்மை உள்ள வேட்பாளர் பன்னீர்செல்வம் வெற்றி பெற பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

