/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீர் பிரச்னை: நீதிபதி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தண்ணீர் பிரச்னை: நீதிபதி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் பிரச்னை: நீதிபதி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் பிரச்னை: நீதிபதி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 29, 2024 11:21 PM
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார்வலசை அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது ஜமீன்தார்வலசை, இலந்தைக்கூட்டம். இப்பகுதியிலுள்ள சில கிணறுகள் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதித்துள்ளது.
தேவிபட்டினம் ஊராட்சி பெயரில் ஒரு நிலம் தானமாக பதிந்து கொடுக்கப்பட்டது. அங்கு கிணறு அமைக்கப்பட்டது. இதற்கும், தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கவும் சித்தார்கோட்டை ஊராட்சியில் அனுமதி பெறவில்லை. அக்கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். ஜமீன்தார்வலசை முதல் தேவிபட்டினம் வரை அமைத்துள்ள குழாய்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து செப்.17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

