/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா 270 பேர் பட்டம் பெற்றனர்

ADDED : ஏப் 07, 2024 04:43 AM

சாயல்குடி : -சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரி செயலர் டி.சந்திரசேகர பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் சசிப்பிரியா வரவேற்றார். குஜராத் மாநில அரசு முன்னாள் முதன்மைச் செயலரும் தியாகி தர்மக்கண் அமிர்தம் குரூப் நிறுவனர் ஜெகதீச பாண்டியன் பங்கேற்று பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்களுக்கு இந்த நாள் ஒரு பொன்னாள் ஆகும். மாதா, பிதா, குரு ஆகியோருக்கு கீழ்ப்படிதல் அவசியம்.
இவைகளை செய்தாலே தெய்வத்தின் அருள் எப்போதும் கிடைக்கும். கல்லுாரி படிப்புக்கு பிறகு சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளாக பிறருக்கு கல்வி கற்பிக்கக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். இதன் மூலம் நல்ல அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க இயலும் என்றார்.
பெங்களூரு இன்ஜினியரிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி சேர்மன், தலைவருமான ரங்கநாத் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். 270 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கல்லுாரி துணைத் தலைவர் ஆஷா, ஜமுனா பாய், ஜெயசீலா உட்பட ஏராளமான பேராசிரியர்கள், பெற்றோர், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.