/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி செக்போஸ்ட்டில் பாதுகாப்புக்கு போலீசார் இல்லை
/
திருப்புல்லாணி செக்போஸ்ட்டில் பாதுகாப்புக்கு போலீசார் இல்லை
திருப்புல்லாணி செக்போஸ்ட்டில் பாதுகாப்புக்கு போலீசார் இல்லை
திருப்புல்லாணி செக்போஸ்ட்டில் பாதுகாப்புக்கு போலீசார் இல்லை
ADDED : ஏப் 21, 2024 04:07 AM

ராமநாதபுரம்: -திருப்புல்லாணி செக்போஸ்ட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம்- கீழக்கரை செல்லும் ரோட்டில் திருப்புல்லாணி விலக்கு பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
சமீப காலமாக இந்த செக்போஸ்ட் கட்டடம் காலியாக உள்ளது. இங்கு போலீஸ் பாதுகாப்பு பணிக்கு இருப்பதில்லை.
இதன் காரணமாக வாகனங்களை ஓழுங்குபடுத்த முடியாத நிலை உள்ளது. கீழக்கரை ரோட்டில் இருந்து திருப்புல்லாணி பகுதிக்கு வாகனங்கள் திரும்பும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தால் வாகனங்களை ஓட்டுபவர்கள் முறையாக வாகனங்களை ஓட்டுவார்கள். தற்போது இஷ்டத்திற்கு வாகனங்களை ஓட்டுகின்றனர்.
இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருப்புல்லாணி பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் சூழலில் செக்போஸ்ட் அமைத்து வாகனங்களை கண்காணித்து அனுப்பினால் பிரச்னைகள் இல்லாமல் பயணிக்க முடியும். குற்றங்கள் குறையும். விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
போலீஸ் செக்போஸ்ட் இருப்பதால் வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனமாக ஓட்டுவார்கள். மாவட்ட போலீஸ் நிர்வாகம் திருப்புல்லாணியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

